Skip to main content
THE BROTHERS ARE BACK ON RAAGA

THE BROTHERS ARE BACK ON RAAGA

ராகாவில் அப்படி இப்படி எப்படி’ நிகழ்ச்சியில் ஆனந்தா மற்றும் ராம்

வானொலியில் நன்கு அறிமுகமான ஆனந்தா மற்றும் ராம் மீண்டும் இணைந்து எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடக்கம் ராகாவில் ‘அப்படி இப்படி எப்படி’ எனும் புத்தம் புதிய நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்கள். ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை, காலை மணி 6 தொடக்கம் 10 மணி வரை ஒலியேறவுள்ள இந்நிகழ்ச்சியில், ரசிகர்கள் தங்களுடைய வார இறுதி நாட்களைச் சிறப்பாக களிக்க பல அரிய விஷயங்கள் கலந்துரையடவுள்ளார்கள்.

சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆனந்தா மற்றும் ராம் மீண்டும் இணைந்து ராகாவில் நிகழ்ச்சி படைக்கவுள்ளார்கள். ‘அப்படி இப்படி எப்படி’ நிகழ்ச்சியில் வார நாட்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அண்மையச் செய்திகள் மற்றும் சமூக வளத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்ட சம்பவங்கள் என பல அறிய தகவல்களைத் தொகுத்து வழங்குவார்கள்.

இதைத் தவிர்த்து, மலாய் மற்றும் ஆங்கிலத்தில் மொழி மொழி பெயர்க்கப்பட்ட தமிழ்த் திரைப்பட பாடல்களை ரசிகர்கள் பாடுவதை இந்நிகழ்ச்சியில் கேட்கலாம். இந்நிகழ்ச்சியின் வாயிலாகவும் ரசிகர்கள் தங்களுடைய அன்புக்குரியவர்களூக்காக பிறந்தநாள், திருமண போன்ற வாழ்த்துகள் தெரிவிக்க விரும்பினால், ராகாவின் Whatsapp எண்களுக்கு அனுப்பி வைக்கலாம். பிறகு, ஆனந்தா மற்றும் ராம் அவர்களைத் தொடர்ப்பு கொண்டு உங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவிப்பத்தோடு மட்டுமின்றி அதனை வானொலியில் ஒலிபரப்புவார்கள்.

இந்நிகழ்ச்சியைக் குறித்தமேல் விவரங்களுக்கு, ராகாவின் raaga.my அதிகாரப்பூர்வஅகப்பக்கம் அல்லது முகநூல் மற்றும் ராகாவுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.