Skip to main content
Raagavin Star Yaar 2.0

Raagavin Star Yaar 2.0

ராகாவின் ஸ்டார் யார் 2.0 வெற்றியாளராக கோகுலன் இளங்கோ தேர்ந்தெடுக்கப்பட்டார்

புதிய வானொலி அறிவிப்பாளர் தேடும் நோக்கில் ராகாவின் ஸ்டார் யார்2.0 தேடலில் கடந்த 4 வாரங்களாக தேர்தெடுக்கப்பட்ட இந்த 4போட்டியாளர்களின் திறமைகளைச் சோதிக்கும் வகையில் பல சவால்களை ராகா குழுவினர்கள் வழங்கி வந்து கொண்டிருந்தார்கள்.

அவற்றுள், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் அமைந்துள்ள ஸ்வீட் கேர் அன்பு இல்லங்களுக்கு உதவும் வகையில் போட்டியாளர்கள் மக்களிடமிருந்து பொருட்களைப் பெற்று சேகரிக்கும் பணி வழங்கப்பட்டது. அவ்வகையில், செப்டம்பர் 12-ஆம் பூச்சோங் டெஸ்கோ பேரங்காடியில் அவ்வில்லங்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களைச் பொதுமக்கள் வழங்கி ஆதரித்தார்கள்.

இன்று செப்டம்பர் 14-ஆம் தேதி கலக்கல் காலை நிகழ்ச்சியில் ‘ராகாவின் ஸ்டார் யார் 2.0’ வெற்றியாளர் கோகுலன் இளங்கோ என்று அறிவிக்கப்பட்டது. இவர் விரைவில் ராகாவில் இணைந்து அறிவிப்பாளராக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார். மற்ற போட்டியாளர்களுக்கும் தேவையான பயிற்சிகளைக் கொடுத்து அவர்களையும் நல்ல அறிவிப்பாளராக உருவாக்க போகுவதாக ராகாவின் தலைவர் சுப்ரா தெரிவித்தார். மேல் விவரங்களுக்கு raaga.my அகப்பக்கத்தை நாடுங்கள்.