Skip to main content
RAAGA fans stand a chance to win up to RM10,000 in cash

RAAGA fans stand a chance to win up to RM10,000 in cash

ராகாவின் ரசிகர்கள் ரிம 10,000 வரை வெல்லும் அரிய வாய்ப்பு

மார்ச் 18-ஆம் தேதி தொடக்கம் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை ‘ராகாவில் தில் இருந்தா காசு’ எனும் போட்டியின் வாயிலாக தங்களுடைய ரசிகர்களுக்காக ரிம 10,000 வரையிலான ரொக்கப் பரிசு ராகா வழங்கவுள்ளது.

‘ராகாவில் தில் இருந்தா காசு’ எனும் போட்டி ராகாவின் அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்கும் ‘கலக்கல் காலை’, ‘வணக்கம் ராகா’, ‘இன்னிக்கு என்ன கதை’, ‘ஹப்பார் மாலை’ மற்றும் ‘வாங்க பழகலாம்’ நிகழ்ச்சிகளில் இடம்பெறும்.

இப்போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என்றால் ரசிகர்கள் ராகாவுடன் காலை முதல் இரவு வரை இணைந்திருந்து அறிவிப்பாளர்கள் அழைக்கலாம் என்று சொன்னவுடனே 03-95430993 எண்களுக்கு அழைக்க வேண்டும். பிறகு, ‘ராகாவில் தில் இருந்தா காசு’ போட்டியின் அழைப்பாளருக்கு அறிவிப்பாளர்கள் ஒரு பாடலின் துணுக்கு ஒலியேற்றுவார்கள். அப்பாடலில் விடுபட்ட சொல்லை 10 விநாடிகளுக்குக் கண்டு பிடித்து சரியான பதிலைச் சொன்னால் ரிம 50 வழங்கப்படும்.

சரியான பதிலைச் சொன்ன அழைப்பாளர் அடுத்து சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு வழங்கப்படும். அடுத்து சுற்றுக்குச் செல்ல நினைக்காத போட்டியாளர் முதல் சுற்றில் வென்ற ரிம 50 உடன் போட்டியிலிருந்து விடைபெறலாம். அப்படி அடுத்த சுற்றுக்குச் செல்ல விரும்பும் போட்டியாளர்கள் மீண்டும் அறிவிப்பாளர்கள் ஒரு பாடலின் துணுக்கு ஒலியேற்றுவார்கள். அப்பாடலில் விடுபட்ட சொல்லை 10 விநாடிகளுக்குக் கண்டு பிடித்து சரியான பதிலைச் சொல்ல வேண்டும். இந்தச் சுற்றில் சரியான பதிலுக்கு ரிம 150 வழங்க வேண்டும். தவறான பதிலைச் சொன்னால் இந்தவொரு ரொக்கப் பரிசும் வழங்கப்படாது.

இரண்டாம் சுற்றில் சரியான பதிலைச் சொல்லும் போட்டியாளர் இறுதிச் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு வழங்கப்படும். இந்தச் சுற்றுக்குச் செல்ல நினைக்காத போட்டியாளர் இரண்டாம் சுற்றில் வென்ற ரிம 150 உடன் போட்டியிலிருந்து விடைபெறலாம். அப்படி அடுத்த சுற்றுக்குச் செல்ல விரும்பும் போட்டியாளர்கள் மீண்டும் அறிவிப்பாளர்கள் ஒரு பாடலின் துணுக்கு ஒலியேற்றுவார்கள். அப்பாடலில் விடுபட்ட சொல்லை 10 விநாடிகளுக்குக் கண்டு பிடித்து சரியான பதிலைச் சொன்னால் ரிம 200 வெல்லாலம். தவறான பதிலைச் சொன்னால் இந்தவொரு ரொக்கப் பரிசும் வழங்கப்படாது.

மேல் விவரங்களுக்கு, raaga.my அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.