Skip to main content
Eneke Vaa & Pettikulle Enna Back for Season 2 on Astro Vinmeen HD

Eneke Vaa & Pettikulle Enna Back for Season 2 on Astro Vinmeen HD

அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி-யில் ‘பெட்டிக்குள்ள என்ன’ மற்றும் எனக்கே வா’ சீசன் 2

கோலாலம்பூர், 18 மே 2018 – மலேசிய ரசிகர்கள் மத்தியில் மிகவும் கவர்ந்த பெட்டிக்குள்ள என்ன’ மற்றும் ‘எனக்கே வா’ நிகழ்ச்சிகளின் சீசன் 2 மே 20-ஆம் தேதி தொடக்கம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் துல்லிய ஒளிபரப்பான அஸ்ட்ரோ விண்மீன் எச்.டியில் ஒளியேறவுள்ளது.

இதை குறித்து அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கூறுகையில், “பெட்டிக்குள்ள என்ன மற்றும் எனக்கே வா, இந்த இரு நிகழ்ச்சிகளும் அதிகமான ரசிகர்கள் விரும்பி கண்டு களித்துள்ள உள்ளூர் நிகழ்ச்சியாகும். இதனைக் கருத்தில் கொண்டு, இம்முறை கூடுதல் வித்தியாசத்துடன் ‘பெட்டிக்குள்ள என்ன’ மற்றும் ‘எனக்கே வா’ சீசன் 2 கொண்டு வருகின்றோம்”.

ஸ்ரீ சோனிக் தொகுத்து வழங்கும் இவ்விரு நிகழ்ச்சிகளிலும் 'வெட்டி பசங்க' புகழ் ஆல்வின் மார்டின், லியோன் நெல்சன், டாவியூ புவனன், ஜாங்கிரி திரைப்படம் குழுவினர்கள் என பல உள்ளூர் கலைஞர்கள் பங்கெடுக்கின்றனர்.13 அத்தியாயங்களை கொண்ட இவ்விரு நிகழ்ச்சிகளை ஸ்ரீ சோனிக் தன்னுடைய நகைச்சுவை மற்றும் பேச்சு ஆற்றலால் நம்முடைய கலைஞர்கள் எவ்வாறு அவரிடம் மாட்டிக் கொள்கின்றார்கள் என்பது நிகழ்ச்சிகளின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.00 மணிக்கு ‘எனக்கே வா’ மற்றும் இரவு 9.30 மணிக்கு ‘பெட்டிக்குள்ள என்ன’ நிகழ்ச்சியை அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி அலைவரிசை 231-யில் இவர்களின் நகைச்சுவை மிக்க சாகசங்களை காணத் தவறாதீர்கள். விண்மீன் எச்.டி அலைவரிசையில் மட்டுமின்றி அஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக இவ்விரு நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கலாம்.

மேல் விவரங்களுக்கு www.astroulagam.com.my அகப்பக்கத்தை வலம் வருங்கள்.