Skip to main content
4th International Indian Trade Expo & Deepavali Kondattam 2018

4th International Indian Trade Expo & Deepavali Kondattam 2018

ஆஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழாவில் நடிகர் அருண் விஜய்

ஆஸ்ட்ரோவின் மாபெரும் 4-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியை பிரபல நடிகர் அருண் விஜய் அக்டோபர் 5-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் அதிகாரப்பூர்வமாகத் துவங்கி வைத்தார்.

இவருடன் ஆஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் நிர்வாக குழும மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து, ஆஸ்ட்ரோ தமிழ் நிகழ்ச்சியின் துணைத் தலைவர், முருகையா வெள்ளை, நெஸ்ட்லே பிரதிநிதி யோகேஸ்வரன், ஜிஎம் கிள்ளான் நிர்வாக இயக்குனர், ஆகிய முக்கிய பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பிறகு, சுமார் 20 நிமிடங்களுக்கு மேடையில் அருண் விஜயின் சிறப்பு நேர்காணல் ஒன்று இடம்பெற்றது. இதனை ராகாவின் அறிவிப்பாளர் கீதா மற்றும் பாடகரும் நடிகருமான முகேன் ராவ் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். நேர்காணல் இறுதியில் என்னால் அறிந்தால் திரைப்படத்திலிருந்து ‘அதாரு அதாரு’ பாடலுக்கு மிகச் சிறப்பாக நடனமாடி ரசிகர்களின் கைத்தட்டல்களைப் பெற்றார். அதுமட்டுமின்றி, தன்னுடைய ரசிகர்களுடன் புகைப்படங்களை எடுத்து கொண்டார்.

அதுமட்டுமின்றி, இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் நம்முடைய உள்ளூர் கலைஞர்களான பாலன் கேஸ்மிர், புனிதா ராஜா, ஷஸ்தான் ஆகியோரின் படைப்புகளும் இடம்பெற்றது.